இறந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் விஜய் தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்: பொன்குமார் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: கரூரில் 40 பேர் மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்குரியதாகும். மறைந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த குடும்பங்களுக்கும் வாழ்வாதத்திற்கு உரிய ஏற்பாடுகளை விஜய் செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 லட்சம் ரூபாய் குடும்ப வாழ்வாதாரமாக வழங்கிட விஜய் முன்வர வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.