ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சாலை புதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் காளிமுத்து (27). இவர் கடந்த 10 ஆண்டுகளாக, திருப்பூரில் பணிபுரிந்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் சந்தானகுமார். இவரது மனைவி ஜெயலட்சுமி (38). இவர்கள் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இவர்களது மகன் கிஷோர் (19) திருப்பூர் கல்லூரியில் பயின்று வருகிறார். உறவினர் என்பதால், காளிமுத்து அடிக்கடி ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் அவர்களுக்குள் நெருக்கமான ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சந்தானகுமார் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து, நேற்று இரவு ஒட்டன்சத்திரத்தை அடுத்த லெக்கையன்கோட்டை அருகே கோவையில் இருந்து மதுரை சென்ற ரயில் முன்பாக ஜெயலட்சுமி, காளிமுத்து இருவரும் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

