சென்னை : போலி பாஸ்போர்ட் வழக்கில் 5 காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 50 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சனுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்களின் மூலம் பாஸ்போர்ட் வழங்கியதாக டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது.
+
Advertisement