சென்னை: கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் நேற்று வெளியிட்டு அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் செயல்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம் வழி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு 11.6.2025 முதல் 14.7.2025 முடிய மாதவரம் பால்பண்ணை காலனி, விவசாய கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்தில் நேர்முக தேர்வு நடந்து வருகிறது.
இணையவழி விண்ணப்பித்துள்ளோர் www.drbchn.in என்ற இணையதள முகவரியில் தங்களது நேர்முக தேர்வு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாளில் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.