புதுடெல்லி: துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார். இன்று புதிய துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த வாரம் தனது துணை ஜனாதிபதி பங்களாவை காலி செய்து விட்டு தெற்கு டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள அபய்சவுதாலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு தன்கர் குடியேறினார்.
பதவி விலகி சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்து முன்னாள் துணை ஜனாதிபதி அடிப்படையில் தனக்கு உள்ள உரிமையின்படி அரசு பங்களா ஒதுக்கும்படி தன்கர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். டைப் 8 வகை பங்களா தன்கருக்கு ஒதுக்கப்படும். எனவே தனக்கு பொருத்தமான அரசு பங்களாவை ஒதுக்க கோரி ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு ஜெகதீப் தன்கர் கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.