காத்மாண்டு: அரசாங்கத்தில் பதிவு செய்ய தவறியதால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம்,எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய சமூக வலைதளங்களுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. நேபாள அரசாங்கத்தின் சார்பாக, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு ஆன்லைன் மற்றும் சமூக வலை தளங்களை செயல்பாட்டுக்கு முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கட்டாயமாக பட்டியலிடவும், தேவையற்ற உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்யவும் ஏழு நாட்கள் காலக்கெடுவை வழங்கியது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பட்டியலிட அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளாத நேபாளத்திற்குள் செயல்படும் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலை தளங்களை தடை செய்ய உத்தரவிட்டது.
+
Advertisement