Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குளிர்ந்த பார்வைக்கு குளுகுளு டிப்ஸ்!

* தினமும் கண்களை சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவுவதால் கண்எரிச்சல் குறையும்.

* வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைக்கவும். இது குளிர்ச்சியும் ரிலாக்சும் தரும்.

* ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து கண்களில் 10 நிமிடம் வைக்கவும் . கொளுத்தும் வெயில் காலங்களில் இது சிறந்தது.

* கற்றாழை ஜெல்லை ஃபிரிட்ஜில் வைத்து கண்களில் தடவுவதால் வீக்கம், எரிச்சல் குறையும்.

* நாள் ஒன்றுக்கு குறைந்தது 7, 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

* கணினியில் வேலை செய்யும் போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பச்சை மரத்தைப் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும்.

* துணியில் சிறிய ஐஸ் கட்டிகளை முடிச்சாக எடுத்து மெதுவாக கண்களுக்கு மசாஜ் செய்யவும்.

* விரல்களால் பயன்படுத்தி மெதுவாக கண்களை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்படும்.

* நீண்ட நேரம் ஸ்கிரீன் பார்ப்பதைத் தவிர்க்கவும், இல்லையேல் கண்களைப்பாதுகாக்கும் ஸ்க்ரீன் கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.

* அதிக வெயிலில் வெறும் கண்களுடன் வாகனம் ஓட்டுவது, நடப்பதைத் தவிர்க்கவும். அல்லது சன் கிளாஸ் அணியவும்.

- கவின்