Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விளக்கம் அளிக்க 15 நாள் கெடு மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிக நீக்கம் செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில், துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது.

இதன் எதிரொலியாக, சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.

துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 2ம்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கருப்பு சட்டை அணிந்தும், யார் துரோகி என்று எழுதிய அடையாள அட்டையுடன் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அப்போது வைகோ, ‘கட்சியை தனது மகனுக்கு வழங்குவதற்காக தன்னை துரோகியாக சித்தரிப்பதாகவும், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ இப்போது அதையே செய்கிறார்’ என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும் ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக் கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கலாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்​சி​யின் சட்ட திட்​டங்​களை மீறி ஒழுங்​கீன​மாக நடந்து கொள்​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்து வரு​வ​தால், மல்லை சி.ஏ.சத்​யாவை கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் தற்​காலிகமாக நீக்கிவைக்க உத்​தர​விடப்​படு​கிறது. ஒழுங்கு நடவடிக்​கைக்கு உட்​பட்டு கட்​சி​யின் உடமை​கள், ஏடு​கள், பொறுப்​பு​கள், கணக்​கு​கள் அனைத்​தை​யும் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளரிடம் ஒப்​படைக்க வலி​யுறுத்​தப்​படு​கிறது.

அவரது கருத்​துக்​கோ, செயல்​பாட்​டுக்கோ மதி​முக பொறுப்​பேற்​காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்​படுத்​தக் கூடாது. மதி​முக தலைமை நிர்​வாகி​கள் குறித்து கருத்து பதிவு செய்​யக் கூடாது” என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. இதுதொடர்பாக மல்லை சத்யா கூறுகையில், ‘‘வைகோ சார்​பில், 15 நாட்​களில் நான் விளக்​கம் அளிக்க வேண்​டும் என, எனக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தகவல் வந்​துள்​ளது. நான் உடனடி​யாக நேரில் விளக்​கம் அளிக்க தயா​ராக இருக்​கிறேன். நாள், நேரத்தை வைகோ​ தான் அறிவிக்க வேண்​டும்’’ என்று கூறினார்.