Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மாஜி அமைச்சருக்கு டோஸ் விட்ட இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சஸ்பெண்டான சைபர் க்ரைம் அதிகாரி ஓட்டம் பிடித்துவிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலாவின் புகலிடமாக விளங்கும் தென்மாநில யூனியனான புதுச்சேரியில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்தபடி இருக்கிறதாம்.. நாள்தோறும் வித்தியாச, வித்தியாசமான மோசடிகள் பதிவாகிறதாம்.. இப்படியெல்லாம்மா ஏமாத்துவாங்க... என்கிற அளவுக்கு புதுசா புதுசா யோசித்து வலைதள மோசடி கும்பல் கைவரிசை காட்டுகிறதாம்.. அங்கு அதிகாரியாக இருந்தவரில் ஒருத்தரான கீர்த்தியானவர் மீது லஞ்ச புகார் எழ, துறை ரீதியாக சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்ததாம்.. இதற்கு சைபர் க்ரைமில் உள்ள சில புள்ளிகளின் உள்ளடி வேலைகள்தான் என்ற பேச்சு காக்கிகள் வட்டாரத்தில் உலாவியதாம்.. இதனால் மன சங்கடத்துக்கு ஆளான அந்த தியாக அதிகாரி, தானாகவே வலியசென்று பணியிட மாறுதல் கோரினாராம்.. அவரது தர்மசங்கடத்தை உணர்ந்த காக்கி தலைமையோ அவரது இடத்துக்கு உடனே மாற்று நபரை போட்டு தியாகியை விடுவித்துள்ளதாம்.. பாவம் ஒருபக்கம்... பழி ஒருபக்கமா... என்ற முணுமுணுப்பில் இருந்தவருக்கு இந்த ஓட்டம் சற்று ஆறுதல் கிடைத்துள்ளதாக காக்கிகளிடம் பேச்சு அடிபடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எஸ்ஐஆர்க்கு போட்டியா கோட்டையானவரின் ஆதரவாளர்களான பிஎல்ஏ-2வை தூக்கி அடிக்க இலைக்கட்சி தலைமைக்கு பட்டியல் போயிருக்காமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி ஒருங்கிணைப்பு தொடர்பா கட்சி தலைமைக்கு எதிரா போர்க்கொடி தூக்கிய ரெட்போர்ட் மற்றும் அவரோடு ஆதரவாளர்களை இலைக்கட்சி தலைமை அடிப்படை உறுப்பினரிலிருந்து தூக்கி அதிர்ச்சியை கொடுத்தது.. போர்க்கொடி தூக்குவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மலராத கட்சியின் ெடல்லி தலைமை கிரீன் சிக்னல் கொடுத்த பிறகு தான் ரெட்போர்ட் மனதை திறந்தாராம்.. எல்லாம் டெல்லி பார்த்துக்கொள்ளும் என நம்பி இருந்த ரெட்போர்ட்டிற்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைச்சது.. ரெட்போர்ட் நிலைமை இப்படி இருக்க, இவரை நம்பி வந்த இலைக்கட்சி நிர்வாகிகளோட பதவிகள் மட்டுல்லாது கட்சியில் இருந்தே தூக்கி அடிக்கப்பட்டு விட்டார்கள்..

இதனால ரெட்போர்ட்டை நம்பி போனவங்க இப்ப புலம்புகிறார்களாம்.. இந்த சூழலில் ரெட்போர்ட் இலைக்கட்சியில் மா.செ.வாக இருந்தப்ப தன்னுடைய மாவட்டத்துல இருக்கிற 3 தொகுதிகளுக்கு தனக்கு வேண்டியவர்களை பிஎல்ஏ-2 (வாக்குச்சாவடி பாக முகவர்கள்) நியமனம் செய்திருந்தாராம்.. இதுல ரெட்போர்ட் தீவிர ஆதரவாளர்கள் பிஎல்ஏ-2 யார் எல்லாம் உள்ளனர் என கணக்கிட்டு பட்டியல் தயாரிச்சு இலைக்கட்சி தலைமைக்கு லிஸ்ட் அனுப்பி இருக்கிறாங்க.. ரெட்போர்ட் நியமனம் செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவங்களை தூக்க சொல்லி தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அவதூறு பரப்பும் இலைக்கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க காக்கி தயங்குகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் மலையோர பகுதி தாலுகாவில் தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர் மீது இலை கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறாராம்..

அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற வேளையில் அதனை வீடியோ எடுத்து வைத்து தவறான தகவல் பரப்பி வருகிறாராம்.. இதனை காக்கி தரப்பு கண்டுகொள்ளவில்லையாம்.. மேலும் இதற்கு தாசில்தார் தனியே எழுத்துப்பூர்வ புகார் கொடுத்த போதிலும் பல நாட்களாகியும் அதன் மீது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உள்ளூர் காவல்துறை தயாராக வில்லையாம்.. சங்கத்தில் முக்கிய பொறுப்பில் அந்த தாசில்தார் உள்ளாராம்.. அதனால் பொறுப்பாளருக்கே இதுதான் நிலையா என்று வருவாய்த்துறை சங்க தரப்பு கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாம்.. எனவே போராட்டகளத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சியில் மற்றவர்கள் பேசக்கூடாது என்ற உத்தரவை மீறி பேசிய மாஜி அமைச்சருக்கு டோஸ் விட்டாராமே சேலத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர் மணியானவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என பேசினாராம்..

கட்சியில் முக்கிய முடிவுகள் குறித்து எதுவும் தலைமை தவிர மற்றவர்கள் பேசக்கூடாது என தலைமை ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்துச்சு.. ஆனால் அதையும் மீறி மாஜி அமைச்சர் பேசியுள்ளாராம்.. இதனால் டென்சனான சேலத்துக்காரர், மாஜி அமைச்சரை போனில் வறுத்தெடுத்து, கடுமையான எச்சரிக்கை விடுத்து இருக்காரு.. இதனால் மாஜி அமைச்சர் கடும் அப்செட்டில் இருந்து வருவதாக கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘யூனியன் காக்கியின் மோர் விவாதம் ஆளும் தரப்பை முணுமுணுக்க செய்துள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுவுக்கு பெயர்போன யூனியனில் காக்கிகள் மீது புதுசா புதுசா புகார் எழுவதால் அதன் தலைமையோ அப்செட்டில் இருக்கிறதாம்.. ஏற்கனவே லஞ்ச வழக்கில் சிலர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்க சமீபத்திய கள்-மோர் விவகாரம் ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.. நாங்கள் குடித்தது கள் அல்ல... மோர்தான்... என ஏனாம் காக்கி ஆய்வான அரசனானவர் ஆருடமிட, மோர் குடித்தற்கே ஜீப்பில் இப்படி குத்தாட்டமா...

என விசாரணை வளையம் இறுக தற்காலிக தீர்வாக ஆடிய ஆய்வை தற்காலிகமாக நீக்கி சைலண்ட் ஆக்கியதாம் காக்கி தலைமை.. பணியிட மாறுதல் பட்டியலில் தப்பியதால் ஜஸ்ட் மிஸ்டு என்று தனது சந்தோஷத்தை காக்கிகள் குழுவில் கோடிட்ட ஆடல் அரசனாவர், மகிழ்ச்சியில் வாங்கி கொடுத்தது உண்மையிலே மோர்ரா என்ற விவாதம் தொடர்ந்து உள்துறையில் உலாவுகிறதாம்.. யூனியன் காக்கி அடுத்த அதிர்ச்சி தராமல் இருந்தால் சரி என்ற முணுமுணுப்பில் இருக்கிறதாம் ஆளும் தரப்பு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.