தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார். புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது மோடிக்கு கைவந்த கலை. நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டிய பிரதமர் மோடி தனது பொறுப்பை மறந்து பேசுகிறார். பீகார், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாதாரண நகராட்சி உறுப்பினர்களுக்கு கூட இப்படி எண்ணம் வராது
 
  
  
  
   
