Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இன்று பங்கேற்க உள்ள போட்டிகள்

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மூன்று நாட்கள் முடிந்துள்ளன. இதுவரை இந்தியா ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. நான்காம் நாளான இன்று இந்திய வீரர்கள் துப்பாக்கி சுடுதல், படகோட்டுதல், ஹாக்கி, வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களில் பங்கேற்க உள்ளனர். இதில் துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சர்போஜித் சிங் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இன்று (ஜூலை 30) இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் அட்டவணை (பிற்பகல் 3 மணிக்கு பிறகு நடைபெறும் போட்டிகள்):- ஹாக்கி ஆடவர் பி பிரிவில் இன்று மாலை 4.45 மணிக்கு இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. மாலை 5.15 மணிக்கு வில்வித்தை பெண்கள் தனிபர் எலிமினேஷன் சுற்றில் இந்தியாவின் அங்கிதா பகத் போலந்தின் வியோலெட்டா மைஸோர் மோதுகின்றனர்.

தொடர்ந்து 5.27 மணிக்கு வில்வித்தை பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று அங்கிதா பகத் (தகுதிக்கு உட்பட்டது) போட்டி நடக்கிறது. அதே நேரத்தில் பெண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று இந்தியாவின் பஜன் கவுர் இந்தோனேசியாவின் சைஃபா நுராபிஃபா கமாலுடன் மோதுகிறார். தொடர்ந்து 5.53 மணிக்கு பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று - பஜன் கவுர் - (தகுதிக்கு உட்பட்டது) போட்டி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசிவாயி பஜர் அல்பியன்/முஹம்மது ரியான் ஆர்டியான்டோ ஜோடியை எதிர்கொள்கிறது. இதுபோல் மாலை 6.20க்கு பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ/அஷ்வினி பொன்னப்பா ஜோடிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா/ஏஞ்சலா யூ ஜோடி மோதுகிறது. இரவு 7 மணிக்கு துப்பாக்கி சுடுதல் ட்ராப் ஆடவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான் (தகுதிக்கு உட்பட்டது) மோதுகிறார்.

இரவு 7.16 மணிக்கு குத்துச்சண்டை ஆண்கள் 51 கிலோ முதற்கட்டப் போட்டி 16வது சுற்றில் இந்தியாவின் அமித் பங்கால் சாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பாவுடன் மோதுகிறார். இரவு 9.24 மணிக்கு நடைபெறும் பெண்கள் குத்துச்சண்டை 57 கிலோ பிரிவில் ப்ரிலிமினரிஸ் - 32 சுற்றில் ஜெய்ஸ்மின் லம்போரியா பிலிப்பைன்சின் நெஸ்தி பெட்சியோவுடன் மோதுகிறார். இரவு 10.45 மணிக்கு வில்வித்தை ஆண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்றில் தீரஜ் பொம்மதேவரா செக் குடியரசின் ஆடம் லியுடனும், இரவு 11.25க்கு நடைபெறும் வில்வித்தை - ஆண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்றில் தீரஜ் பொம்மதேவரா (தகுதிக்கு உட்பட்டது) பங்கேற்கிறார். நள்ளிரவு 1.12 மணிக்கு குத்துச்சண்டை பெண்கள் 54 கிலோ - பிரிலிம்ஸ் - 16வது சுற்றில் ப்ரீத்தி பவார் கொலம்பியாவின் யெனி மார்செலா அரியாஸ் காஸ்டனெடாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.