ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 35 பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 35 பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காளை மாட்டு சிலை அருகே தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாதகவினர் பிரச்சாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக நாதகவினர் மீது ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளன.


