ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டினை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந.செகதீசன் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தியதையடுத்து அன்னாரின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (22.11.2025) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும்.
தமிழன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதலமைச்சர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.


