இறுதி காலம் வரை பல வழிகளிலும் தமிழுக்கு தொண்டாற்றியவர்: ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வசித்தவர். இறுதி காலம் வரை பல வழிகளிலும் தமிழுக்கு தொண்டாற்றியவர். பாவேந்தர் பாரதிதாசனுடன் 10 ஆண்டுகள் நெருங்கி பழகியவர் என்ற சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். கலைமாமணி, சாகித்ய அகாதமி என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தனது கலைப் பணிக்காக எண்ணற்ற விருதுகளை பெற்றவர் என புகழாரம் தெரிவித்தார்.


