ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு ரூ.4.3 கோடிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும். பவானி, கீழ்பவானி நீர்பாசன திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனை பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும். 90 கிராமங்களின் விவசாயிக்களின் பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும். அந்தியூர் அருகே தோனி மடுவு குறுக்கே ரூ.4 கோடியில் புதிய தடுப்பணை அமைக்கப்படும். சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் பாசன விவசாயிகளுக்கு சட்ட சிக்கலை தீர்க்க வல்லுநர் குழு. பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.
+
Advertisement


