Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

*8 லிட்டர் சாராயம், 30 லிட்டர் ஊறல் பறிமுதல்

ஈரோடு : ஈரோடு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம், ஆயுள் தண்டனை என சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஈஞ்சம்பள்ளியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று காலை அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீட்டில் சந்தேகிக்கும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தது. போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, வீட்டிற்குள் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு தயராக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சாராயம் காய்ச்சியதாக ஈஞ்சம்பள்ளி கொன்னம்பாளையம் மேற்கு தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (40). அவல் பூந்துறை பழனிகவுண்டன் வலசை சேர்ந்த குமார் (34), பூந்துறை சேமூர் லிங்க கவுண்டன் வலசு அம்பேத்கார் நகரை சேர்ந்த கார்த்தி (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 8 லிட்டர் சாராயம், 30 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பேரல், அடுப்பு போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.