அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் கட்டப்படும் ராமாயண பூங்காவில் 25 அடி உயர ராவணன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி கூறுகையில், “குப்தார் காட் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஏனெனில் ராமர் இங்கு புனித நீராடி பின்னர சொர்க்கத்துக்கு சென்றதாக நம்பப்படுகிறது.
இங்கு கட்டப்பட்டு வரும் ராமாயண பூங்காவில், ராமன், அனுமன், சுக்ரீவன், விபீஷனன் மற்றும் அங்கதன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வாழ்க்கையை விளக்கும் சிற்பங்கள் இடம்பெற உள்ளன. அத்துடன், ராமருக்கும், ராவணனுக்கும் இடையே நடந்த காவியப்போரை சித்தரிக்கும் விதமாக 25 அடி உயரத்தில் ராவணன் சிலை நிறுவப்படும்” என்றார்.

