Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்ட்ரி!

என் ட்ரி : லேர்னிங் ஆப் ஃபார் ஜாப்ஸ் (Entri: Learning App for Jobs)

இந்தியாவில் வேலைக்கு தயாராகும் மாணவர்களுக்கும் வேலைதேடுபவர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு மொபைல் செயலி. இந்த செயலி பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் நடைபெறும் தேர்வுகளுக்கான பாடங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. குறிப்பாக மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் கற்றுக்கொள்ளும் வசதியையும் இது கொண்டுள்ளது. விருப்ப மொழியில் அரசு தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு செயலி செய்கிறது.

இந்தச் செயலியில் வங்கி தேர்வுகள், கம்ப்யூட்டர் அடிப்படை தேர்வுகள், SSC, UPSC, ரயில்வே, TNPSC போன்ற அரசு வேலை தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் டெஸ்ட் சீரிஸ், மாக் டெஸ்ட்கள், தினசரி பொது செய்திகள், அப்டேட்கள் ஆகியவை மூலம் தேர்வர்களின் தயார் நிலையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, தனியார் துறைகளில் வேலைக்கு தேவையான திறன்கள், உதாரணமாக ஆங்கில மொழி திறன், கணினி பயன்பாடு, பேச்சுத் திறன் போன்றவை பற்றிய பயிற்சிகளையும் வழங்குகிறது.

இதன் மிகப்பெரிய சிறப்பு அம்சம், கற்றலை எளிதாக்கும் விதமாக வீடியோ வகுப்புகள், ஆடியோ பாடங்கள், பயிற்சி வினாக்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருப்பதே. பயனர் தன்னுடைய வசதிக்கேற்ப எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை பெறலாம். அதேபோல், கற்றல் முன்னேற்றம் குறித்த விரிவான பகுப்பாய்வும் தரப்படுகிறது.மொத்தத்தில், Entri என்பது வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளைச்சந்திக்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டுதலை தரும் செயலியாக விளங்குகிறது. அரசு வேலை அல்லது தனியார் துறையில் திறமையை வளர்த்து நல்ல நிலை அடைய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தோழன்.