தொழில் முனைவேர் சான்றிதழ் படிப்பினை தங்கி பயில ரூ. 2.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை திறந்து வைத்தார் அமைச்சர் தாமோ.அன்பரசன்..!!
சென்னை: தொழில் முனைவேர் சான்றிதழ் படிப்பினை தங்கி பயில ரூ. 2.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை அமைச்சர் தாமோ.அன்பரசன் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இன்று (3.12.2025) நடைபெற்ற விழாவில் தொழில் முனைவேர் சான்றிதழ் படிப்பினை தங்கி பயில ரூ. 2.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தாமோ.அன்பரசன் திறந்து வைத்து பேசியதாவது.
தமிழ்நாடு அரசின் EDII நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் சான்றிதழ் படிப்பில் 120 தொழில் முனைவோர் தங்கி பயிலும் வகையில் ரூ. 2 கோடியே 34 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் கீழ் 20 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ. 35 லட்சத்து 63 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. EDII நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று தொழில் முனைவோர்களாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2001ம் ஆண்டு கலைஞரால் தொடங்கப்பட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் EDII தனது 25 ஆண்டு கால சேவையினை நிறைவு செய்து வெள்ளி விழா கண்டுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர். அலுவலர்கள், பணியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட "பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்" கல்லூரி மாணவர்களுக்கு "நிமிர்ந்து நில் திட்டம்" ஊரக வாழ்வாதார இயக்கம்,நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஆதிராவிடம் மற்றும் பழங்குடியினர் என அனைத்துத் துறை தொழில் முனைவோர்களுக்கும் EDII நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. கழக அரசு பொறுப்பேற்ற 4 ½ ஆண்டு காலத்தில் இந்த திட்டங்களின் கீழ் 50 லட்சத்து 18 ஆயிரத்து 91 நபர்களுக்கு தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க இளைஞர்களுக்கும், மாணவர்ளுக்கும் அரசு உதவி தொகையினை உயர்த்தி வழங்கி வருகிறது. புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்காக வழங்கப்பட்டுவரும் உதவித் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாகவும், அவற்றை தயாரித்து சந்தைப்படுத்த வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4% ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ்,572 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு கோடியே 50 லட்சம் உதவி தொகையாக வழங்கப்படுகிறது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவ குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. கடந்த 4½ ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற 140 சிறந்த மாணவ குழுக்களுக்கு, ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியில் முன்னேறிய உலக நாடுகளில் உள்ளது போல கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் தொழில் முனைவோர்களாக வளர்த்தெடுக்க 124 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழில் வளர் காப்பகங்கள் Incubation Centres அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 ½ ஆண்டுகளில் 39 Incubation Centres- தொழில் வளர் காப்பகங்களுக்கு. ரூ.21 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசின் தொழில் வளர் காப்பகங்களை பயன்படுத்தி 961 இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து தொழில்முனைவோர்களாக உருவாகி உள்ளனர். இளைஞர்களை ஊக்கப்படுத்தி தொழில்முனைவோர்களாக உருவாக்கிட, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 23 தொழில் முனைவோர்கள் தங்களது ஓராண்டு சான்றிதழ் படிப்பினை முடித்து, புதிய தொழில்களை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நகர, பேரூர், கிராமப்புற இளைஞர்களையும் தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில், தொழில்முனைவேர் சான்றிதழ் படிப்பினை பயிலவருவோர் தங்கி பயில EDII நிறுவனத்தின் மூலம் தங்கும் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்முனைய ஆர்வம் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இளைஞர்கள். மாணவர்கள் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெற்று புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு நற்பெயரை ஏற்படுத்திடவும், முதல்வரின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கினை அடைய துணை புரிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விழாவில் MSME அரசு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், EDIl சிட்கோ மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், EDII இயக்குநர் அம்பலவாணன் கலந்துக் கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

