Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீனாட்சி பொறியியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: மீனாட்சி பொறியியல் கல்லூரி, 25-08-2025 அன்று 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்களின் புதுமுக வரவேற்பு நிகழ்ச்சியை உற்சாகத்துடன் சிறப்பாக நடத்தியது. விழாவானது , தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கேற்றுதலுடன் இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.ஆனந்தக் குமார் வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி. ரா .கோகுல் அவர்களும் ,செயல் இயக்குனர் என். இரெங்கராஜன் அவர்களும், தலைமை சிறப்புரையாளர் சார்லஸ் காட்வின் அவர்களும், சிறப்பு விருந்தினர் கணேஷ் வெங்கட்ராமன் அவர்களும் பங்கேற்றனர். மேலும், கல்லூரி முதல்வர் , துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தலைமையுரையில், டாக்டர். ஜி. ரா. கோகுல் அவர்கள், மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஒழுக்கம், புதுமை மற்றும் கல்லூரியின் முழுமையான வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோராகவும், சிறப்பான குடிமக்களாகவும் வளர்வதற்காக நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்வி சார்ந்த ஒழுங்குமுறை மாணவர் ஆதரவு அமைப்புகள் மற்றும் பாட செயல்பாடுகள் பற்றிய அறிமுகமும் வழங்கப்பட்டது.

இந்நாளின் சிறப்பம்சமாக ரூ.75,55,000 மதிப்பில் கல்வி உதவித்தொகைகள் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ பயிலும் 124 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் அறங்காவலர் ஏ.என். இராதாகிருஷ்ணன் உதவித்தொகை மாணவர்களுக்கும் மற்றும் மீனாட்சி அம்மாள் உதவித்தொகை மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மாள் அறக்கட்டளையின் இந்த தாராளமான முயற்சி, தரமானக் கல்வியை மேம்படுத்தும் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. கல்வியில் சிறந்து விளங்குவதற்கான, கல்லூரியின் தொலைநோக்குப் பார்வையைப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்.