செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் நெல் தேங்கும் நிலை ஏற்படாது: அமைச்சர் சங்கரபாணி
சென்னை: கடந்த ஆண்டை விட நாகையில் 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என அமைச்சர் சங்கரபாணி தெரிவித்துள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் நெல் தேங்கும் நிலை ஏற்படாது. போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.