Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கி. அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் லியாம் டாசன்

மான்செஸ்டர்: இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 10 வீரர்கள், இடம்பிடித்திருக்கிறார்கள்.

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் சோயிப் பஷிருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காயம் குணமடையாததால் 4வது டெஸ்ட்டில் அவருக்கு பதிலாக லயம் டாசன் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அணியில் இடம்பிடித்திருந்தார்.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஓரளவு நன்றாக விளையாடக்கூடிய வீரர் அவர் மட்டும் தான் என்பதால், 4வது டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு இங்கிலாந்து அவரை தேர்வு செய்துள்ளது. அது மட்டுமின்றி மான்செஸ்டர் ஆடுகளம் கொஞ்சம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் லயம் டாசன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் காயம் அடைந்த நிலையில் அவர் முழு உடல் தகுதியை எட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே அவர் 4வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார். 4வது டெஸ்ட்டில் களமிறங்கும் இங்கிலாந்து அணி: ஜாக் கிராலி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜெமி ஸ்மித், லியாம் டாசன், கிறிஸ் வொக்ஸ், பிரைடன் கர்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்.