கட்டாக்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் 300 ரன்னுக்கு மேல் குவித்தும் அதிக முறை தோல்வியை தழுவிய அணியாக வினோத சாதனை படைத்துள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்களை குவித்து வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை குவித்து இங்கிலாந்தின் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார். கட்டாக்கில் நடந்த ஒரு நாள் போட்டி, 300 ரன்னுக்கு மேல் எடுத்து 28வது முறையாக தோல்வியை தழுவிய சாதனைப் போட்டியாக இங்கிலாந்து அணிக்கு அமைந்துள்ளது. இந்த வினோத சாதனைப் பட்டியலில் 27 தோல்விகளுடன் இந்தியா முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தை இங்கிலாந்து கைப்பற்றி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 23 முறையும், இலங்கை 19 முறையும் 300 ரன்னுக்கு மேல் குவித்து தோல்வியை தழுவிய அணிகளாக அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Advertisement