இங்கிலாந்து: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதன் வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரு தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி பின்னர் தொடரை சமன் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
5வது போட்டியின் நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய நிச்சயம் தோல்வியை தழுவி தொடரையும் தாரைவார்க்கும் என அனைவராலும் கருதப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து 7வது விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் இந்திய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை துளிர்த்தது. இதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு நெருப்பு போலிருந்தது. குறிப்பாக முகமது சிராஜ் பந்துவீச்சில் மிரட்டினார்.
இந்த சூழலில் வெற்றிக்கு 7 ரன்கள் இருந்த போது அட்கின்சன் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி தேரில் வெற்றி பெற்றது. குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். இதனை தொடர்ந்து இந்த தொடர் முழுவதும் ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு மைதானத்தை சுற்றி வந்து இந்திய வீரர்கள் நன்றியை தெரிவித்தனர்.