Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி டெஸ்டில் கலக்குமா இந்தியா? ஓவல் அரங்கில் இன்று துவக்கம்

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 4 டெஸ்ட்களில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவற்றில் 4வது டெஸ்ட் மட்டும் சமனில் முடிந்தது. மேலும், அந்த டெஸ்ட்டில் இந்தியாவின் அதிரடி ஆட்டமும், போராட்ட போக்கும் வெளியானது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சோர்வடைய செய்த 4வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸ் வரலாறானது.

அதே உற்சாகத்தில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியாவும், ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்தும் இன்று தொடங்கும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட்டில் களம் காண உள்ளன. தொடரில் முன்னிலையில் உள்ள உற்சாகத்துடன் இங்கிலாந்து இன்று களம் காண இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அணிக்கு தொடரும் பலம். இந்த டெஸ்ட்டில் வென்று தொடரை 3-1 என்ற கணக்கில் வசப்படுத்த இங்கிலாந்தின் ஜோ ரூட், போப், வோக்ஸ், டக்கெட், ஓவர்டன் ஆகியோர் கூடுதல் வேகம் காட்டுவார்கள்.

ஆனால் இந்த டெஸ்ட்டில் இந்தியா வென்றால் மட்டுமே தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் முடியும். இந்திய அணியில் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. இந்தியா இதுவரை விளையாடிய டெஸ்ட் தொடர்களில் பின் தங்கியிருந்தாலும் இவ்வளவு ரன் குவித்ததில்லை.

தனிப்பட்ட வகையில் கேப்டன் கில், ராகுல், ஜெய்ஸ்வால், ஜடேஜா, வாஷிங்டன் சதங்களால் மிரட்டி வருகின்றனர். இப்போட்டியில் முன் வரிசை வீரர்கள், நடு வரிசை வீரர்கள் ஆடினால் மட்டும் போதாது. கடைசி வரிசை வீரர்கள் களத்தில் தாக்குப்பிடிக்க வேண்டியது அவசியம். அப்படி செய்தால் இந்தியா வெற்றிக்கு பக்கத்தில் செல்ல முடியும். தொடரை சமன் செய்ய முடியும்.

* அணி விவரம்

இங்கிலாந்து: ஜாக் கிரவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜாமி சுமித் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், ஜோ ரூட், ஜேகப் பெதேல், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜாமி ஓவர்டன், ஜோஷ் டங்.

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

* ஸ்டோக்ஸ் ஆப்சென்ட் ஒல்லி போப் கேப்டன்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தோள் பட்டை வலியால், ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். ஸ்டோக்ஸுக்கு பதில், ஒல்லி போப் கேப்டனாக செயல்படுவார். அதேபோல், பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் டாவ்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக, ஜேகப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஷ் டங் ஆகியோர் அணியில் இடம் பெறுகின்றனர்.