அரக்கோணம்: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 10.50 மணியளவில் அரக்கோணம் வந்தது. பின்னர், அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது. புளியமங்கலம்- மோசூர் இடையே எதிர்பாராதவிதமாக இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் ரயில் நடுவழியில் நின்றது. இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு சென்று பொருத்தப்பட்டு சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக காட்பாடி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் சில மின்சார ரயில்கள் காலதாமதமாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
+
Advertisement