சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை மையம் சார்பில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கும் தனிநபர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்துறையினர், சிறு, குறு நடுத்தர தொழில்துறையினர், புத்தாக்க தொழில்துறையினர் (ஸ்டார்ட்அப்) ஆகியோர் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் வகையில் அறிவுசார் சொத்துரிமை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், பொறியியல் மாணவர்களுக்கான ஒருவார கால சான்றிதழ் பயிற்சி செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிவடைகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கிவரும் அறிவுசார் சொத்துரிமை மையத்தின் இயக்குநரை அணுகலாம். கூடுதல் விவரங்களை www.annauniv.edu/ipr என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement