சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கைன 2வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான 2வது சுற்று கலந்தாய்வு ஜூலை 26 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2வது சுற்று இணையவழி கலந்தாய்வு தொடங்கியது. இதில் கலந்துகொள்ள கட் ஆப் மதிப்பெண் 178.965 முதல் 143.085 வரை எடுத்துள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வரிசைப்படி தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகளை 28ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வுசெய்ய வேண்டும். 29ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை அவர்கள் 30ம் தேதி மாலை 5 மணிக்கு உறுதிபடுத்த வேண்டும். உறுதி படுத்திய பிறகு 31ம் தேதி காலை 10 மணிக்கு முன்பாக அவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
அதன்பின்னர் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவது, அசல் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட சேர்க்கை நடைமுறைகளை முடித்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும். இதைத்தொடர்ந்து, 3வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி முடிவடைகிறது.