Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இன்ஜினியரிங் உயர்கல்வி படிக்க ‘‘கேட்-2026’’ தேர்வு அறிவிப்பு

தேர்வு: கிராஜூவேட் அப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (ஜிஏடிஇ):

(Graduate Aptitude Test in Engineering).

தகுதி: பி.இ., மூன்றாம் ஆண்டு அல்லது நான்காம் ஆண்டோ படித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/பி.டெக் அல்லது ஆர்க்கிடெக்சர்/

அறிவியல்/வணிகவியல்/கலை/மனித வளம் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் மற்றும் பிளானிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, வேதியியல், டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், என்விரோன்மென்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எக்காலஜி மற்றும் எவால்யூஷன், ஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங், ஜியாலஜி மற்றும் ஜியோ பிசிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங், கணிதம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், மெட்டாலர்ஜிக்கல் இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் மரைன் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், இயற்பியல், புரடக்ஜன் மற்றும் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், புள்ளியியல், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் மற்றும் பைபர் சயின்ஸ், இன்ஜினியரிங் சயின்சஸ், ஹூயூமனைஸ்டிஸ் மற்றும் சோஷியல் சயின்சஸ், லைப் சயின்சஸ் ஆகிய பாடங்களில் கேட்-2026 தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு எனர்ஜி சயின்சஸ் என்ற பாடம் புதிதாக தேர்வுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பாடங்களில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதலாம். இரண்டு பாடங்களுக்கும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம். 2 பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 2 பாடங்களுக்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ஒரு பாடத்திற்கு ரூ.2,000/-. (தாமத கட்டணம் ரூ.2,500/-.). பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிக்கு ஒரு பாடத்திற்கு ரூ.1000/- (தாமத கட்டணம் ரூ.1,500). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.கேட் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சர்வதேச அளவில் கேட்-2026 தேர்வு நடத்தப்படாது. எனவே வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள், கேட்-2026 தேர்வு எழுத விரும்பினால் இந்தியாவிற்கு வந்து தான் எழுத வேண்டும்.https://gate2026.iitg.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.09.2025

தாமத கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள்: (06.10.2025.)