சென்னை: முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் 11,359 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். ஜூலை 23-க்குள் சேர்க்கையை உறுதி செய்யாதவர்களின் இடங்கள் காத்திருப்பில் உள்ளவர்களுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Advertisement