ஹாமில்டன்: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசி வென்ற நிலையில், ஹாமில்டன் நகரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 36 ஓவர்களில் 175 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
பின், எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசி. 33.1 ஓவர்கள் மட்டுமே ஆடி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா 54, டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 56 ரன் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
