மதுரை : அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தனது ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வாரம் ஒரு முறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement


