வேலைவாய்ப்புக்கு நான் பொறுப்பு 10 முஸ்லிம் பெண்களை மணந்து கொள்ளுங்கள்: உபி மாஜி பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
சித்தார்த்நகர்: உ.பி சித்தார்த்நகர் மாவட்டம் துமாரியாகஞ்ச் தொகுதி முன்னாள் பாஜ எம்எல்ஏ ராகவேந்திரபிரதாப்சிங். இவர் தன்கர்பூர் கிராமத்திற்கு சென்று இருந்தார். அங்கு 2 இந்து பெண்கள், முஸ்லிம்களை மணந்து மதம் மாறிய தகவல் அறிந்ததும், அந்த ஊர் மக்கள் மத்தியில் ராகவேந்திரபிரதாப்சிங் பேசியதாவது: இரண்டு இந்துப் பெண்களுக்கு பதிலாக 10 முஸ்லிம் பெண்களையாவது இந்து வாலிபர்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
ஒரு முஸ்லிம் பெண்ணுடன் ஓடிப்போகும் எந்த இந்துவுக்கும் நான் திருமண ஏற்பாடு செய்வேன். அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்பாடு செய்வேன். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இந்து இளைஞர்கள் குறைந்தது 10 முஸ்லிம் பெண்களையாவது அழைத்து வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். மீதமுள்ளவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன். இது யோகியின் சகாப்தம். பயப்படத் தேவையில்லை என்றார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
