லாஸ் ஏஞ்சல்ஸ்: அடோலசென்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது வழங்கப்பட்டது. மிகக் குறைந்த வயதில் ஓவன் கூப்பர் எம்மி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான 'எம்மி' விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறந்த முன்னணி நடிகர், முன்னணி நடிகை மற்றும் துணை நடிகைக்கான விருதுகளை 'ஹேக்ஸ்' காமெடி தொடர் வென்றது.
சேத் ரோஜென் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் வென்றனர். ஹன்னா ஐன்பிண்டர் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
இங்கிலாந்தின் 'அடோல்சென்ஸ்' தொடருக்கு சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட 6 பிரிவுகளில் எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் நடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதன்மூலம், எம்மி விருதை மிக இளைய வயதில் பெற்றவர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் பெற்றார்.