பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரனின் 68ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக, மதிமுக, பாஜ, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனால் காவல்துறை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஒரு ஐஜி, நான்கு டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள், 32 ஏடிஎஸ்பிக்கள், 70 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 7,435 போலீசார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.