சென்னை: டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நடிகை திரிஷா வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வந்து போலீசார் சோதனை நடத்தினர். ஒரு மணி ேநரம் நடந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை ைவத்து சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை திரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement

