மின்னஞ்சல் மூலம் நடிகர் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை
சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, நடிகைகள் பிரியா பவானி, சாச்சி அகர்வால் ஆகிய வீடுகளில் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனே பாதுகாப்பு பிரிவுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
அதன்படி, தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதேபோல் ஆர்.ஏ.புரத்தில் வசித்து வரும் பிரியா பவானி, சாக்ஷி அகர்வால் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
மேலதி.நகரில் உள்ள எச்.ராஜா வீடு, நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது எந்த வெடிகுண்டும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்தது.
அதைதொடர்ந்து போலீசார் மிரட்டல் தொடர் மிரட்டல் விடுத்து வரும் நபரை தேடி வருகின்றனர்.
