டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட்(எம்எல்சி) டி20 போட்டியின் வெளியேறும் சுற்று ஆட்டம் நேற்று டல்லாசில் நடந்தது. அதில் லீக் சுற்றில் 3 வது இடத்தை பிடித்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், 4வது இடம் பிடித்த எம்ஐ நியூயார்க் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சான்பிரான்சிஸ்கோ 19.1ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 131ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக 8வது வீரராக களம் கண்ட சேவியர் பார்ட்லெட் 24பந்தில் 2பவுண்டரி, 4சிக்சர் என 44 ரன் விளாசினார். அதுதான் சான்பிரான்சிஸ்கோ ஸ்கோர் 100யை கடக்க காரணம். நியூயார்க் அணியின் ருசில் 3, போல்ட், நாஸ்தோஷ் தலா 2விக்கெட் கைப்பற்றினர்.
அதனையடுத்து களமிறங்கிய நியூயார்க் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மோனக் படேல், டி காக் இருவரும் தலா 33ரன் எடுத்து நல்ல தொடக்கத்தை தந்தனர். ஆனால் அடுத்து வந்தவர்கள் குறைந்த ரன்னில் வெளியேறினர். ஆனால் 9வது வீராக களமறிங்கிய வேகம் டிரன்ட் போல்ட் 12ரன்னில் 22*ரன் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். அதனால் 19.3ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132ரன் எடுத்த நியூயார்க் 2விக்கெட் வி்த்தியாசத்தில் போராடி வென்றது. சான்பிரான்சிஸ்கோ வீரர்கள் ஹசன்கான் 4, கேப்டன் மேத்யூ ஷார்ட் 3 வி க்கெட் அள்ளினர். ஆட்டநாயகனாக ேபால்ட் தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் நியூயார்க் அணி சவால் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நாளை நடைபெறும் அந்த ஆட்டத்தில் டெக்சாஸ் அணியுடன் மோத உள்ளது. இந்த சவால் சுற்றில் வெற்றிப் பெறும் அணி இறுதி ஆட்டத்தில் வாஷிங்டன் உடன் மோதும்.