கோவை: கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது.
அதிகாலை 4 மணியளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில், மருத்துவர்கள் ராஜேஷ் , வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இதையடுத்து கபில்தேவ், வாசிம், பொம்மன், சின்னத்தம்பி ஆகிய 4 யானைகளுடன் வனத் துறையினர் ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்தி வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.