சென்னை : 'பீக் ஹவர்' எனப்படும், உச்ச நேர மின் தேவையை ஈடுகட்ட வெளி சந்தையில் மின்சாரம் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்படும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2026 பிப்.1 முதல் மே 15 வரை 7040 மெ.வாட் மின்சாரம் வாங்க டெண்டர் கோர தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
+
Advertisement