சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் பெண் ஒருவர், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் அவர் மீது மோதியது. இதில், அந்த பெண்ணின் வலது கால் துண்டானது.
தூக்கி வீசப்பட்டத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த பெண் சுயநினைவின்றி கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.