மின்சார கேபிள் புதைக்கும் பணிகளால் சேதமடைந்த சாலையை மண் கொட்டி, ஜேசிபி மூலம் சரி செய்யும் காவல்துறையினர்
சென்னை: சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் இருந்து தந்துரை செல்லும் சாலையில் மின்சார கேபிள் புதைக்கும் பணிகளால் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மண் கொட்டி, ஜேசிபி மூலம் சாலையை செப்பனிட்டு வருகின்றனர்.