அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தியாக வரலாறு உள்ளது. அதிமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். விஜய் பரீட்சை எழுதட்டும். அவர் பாஸ் ஆவாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் களத்தில் விஜய் தற்போது தான் படித்துக் கொண்டிருக்கிறார்.திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் அறியாமல் தெரியாமல் பேசுகிறார். தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு மாற்று அதிமுக. அதிமுகவிற்கு மாற்று திமுக என்பது காலம் காலமாக உள்ள வரலாறு. எல்லா நேரத்திலும் தலைமையாசிரியர் பதில் சொல்ல முடியாது. தலைமையாசிரியராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆசிரியர் சிலர் பதிலளித்து வருகிறார்கள்.இவ்வாறு கூறினார்.
+
Advertisement