டெல்லி: எடப்பாடியின் பிரச்சாரப் பயணம் மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் உத்தியை மாற்ற வேண்டும் என எடப்பாடிக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. சசிகலா, டிடிவி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க எடப்பாடி திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளார். நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் கட்சியில் கோஷ்டிகள் உருவாகி குழப்பம் ஏற்படும் என எடப்பாடி விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராகவே தன்னை ஏற்காதவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார். பிரிந்து சென்றவர்களை சேர்க்காததால் 2021, 2024 தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்தது என அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது. நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்றும், என்டிஏ கூட்டணியில் மட்டும் அவர்களை சேர்க்கலாம் என எடப்பாடி கூறியதாக கூறப்படுகிறது.
+
Advertisement