சென்னை: ராகுல்காந்தி தோலுரித்துக் காட்டிய, தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் 11ம்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அன்று மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று தேர்தல் ஆணையம் மற்றும் பாஜ அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்ப கேட்டுக் கொள்கிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.