Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் நடக்க உள்ள பீகாரில் 4 வழி பசுமைச்சாலை, ரயில்வே திட்டத்திற்கு ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவை முடிவு

புதுடெல்லி: விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்தில் 4 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கும், ஒருவழி ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றுவதற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.4,447 கோடி செலவில் 82.4 கிமீ நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இதே போல, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பாகல்பூர்-தும்கா-ராம்பூர்ஹட் ஒருவழி ரயில் பாதையை (177 கி.மீ) ரூ.3,169 கோடி செலவில் இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது.