புதுடெல்லி: பீகாரில் வரும் 6, 11ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தலும், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, ஜார்க்கண்ட், மிசோரம், பஞ்சாப், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் 8 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 11ம் தேதியும் நடக்க உள்ளது. கடந்த மாதம் 6ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில், பீகார் உட்பட தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள மாநிலங்களில் நேற்றைய நிலவரப்படி, ரூ.9.62 கோடி பணம், ரூ.42.14 கோடி (9.6 லட்சம் லிட்டர்) மதிப்புள்ள மதுபானம், ரூ.24.61 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.5.8 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.26 கோடி மதிப்புள்ள பிற இலவச பொருட்கள் என ரூ.108.19 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
+
Advertisement 
 
 
 
   