தேர்தலின்போது பாமகவில் இரு தரப்பு பிரச்சினை இருந்தால் கட்சி சின்னம் முடக்கி வைக்கப்படும்: தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல்
டெல்லி: தேர்தலின்போது பாமகவில் இரு தரப்பு பிரச்சினை இருந்தால் கட்சி சின்னம் முடக்கி வைக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் பாமகவில் யார் அங்கீரிக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்கும்? என நீஎதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், எங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம். கட்சியினர் இடையே நிலவும் பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூற முடியாது. இதில் பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால் படிவம் ஏ, பி-யில் இருதரப்பு கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் ஏற்காது என்றும் தெரிவித்தது.

