வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை - தேர்தல் ஆணையம்
சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13ம் தேதிக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
