நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடும் குளிர் காரணமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரித்த வண்ணம் உள்ளது. நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளிலிருந்து, தினமும் உற்பத்தியாகும் முட்டைகள் அனைத்தையும், வியாபாரிகள் வாங்கி சென்று விடுகின்றனர். நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், தற்போது முட்டை இருப்பு இல்லை என்ற நிலை நிலவுகிறது. வரும் நாட்களில் முட்டை விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
+
Advertisement

